Our History
கோவை நகரத்தார் இளைஞர் சங்கம் கடந்த 1981 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு வெள்ளி விழாவைக்கண்டு பொன் விழாவை நோக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிற சங்கமாகும்.
இளைஞர்களுக்காகவும், இளம் பெண்களுக்காகவும் வாழ்க்கையில் முன்னேற்ற வழிகளை ஏற்படுத்திக்கொள்ளவும் வாழ்க்கையை எதிர்காலத்தில் சிறப்புற அமைத்துக்கொள்வதற்காகவும் பல வகையில் பயிற்சி வகுப்புக்கள், சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு விழாக்கள், திறமையுள்ளவர்களுக்கு போட்டிகள் மூலம் பரிசு வழங்கிச்சிறப்பித்தல், இலக்கிய விழாக்கள் மாதந்தோறும் பல ஆன்மிக விழாக்கள் போன்று பல்வேறு நிகழ்ச்சிகளை இந்த சங்கம் சிறப்புற தொடர்ந்து நடத்தி வருகிறது.
இத்தகைய வளர்ச்சி மிக்க கோவை நகரத்தார் இளைஞர் சங்கத்தில் 2004 ஆம் ஆண்டு முதல் நாள் தலைவராகப் பொறுப்பேற்று 2006-ல் வெள்ளி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடியதோடு 2006 ஆம் ஆண்டு முதல் 2009 வரை எனது நிர்வாகக் குழுவினருடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் நோன்பு விழாவும் மற்ற ஆன்மிக நிகழ்ச்சிகளும், இலக்கிய விழாக்களும் ஒவ்வொரு ஆண்டும் நகரத்தார் குழந்தைகளுக்கு போட்டிகளும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
17-05-2009 அன்று பொதுக்குழு கூட்டப்பட்டு நான் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய நிர்வாகக்குழு அமைக்கப் பெற்று தொடர்ந்து பல சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்தி சிறப்புச் செய்து வருகிறோம்.
2009 - 2010 ஆம் கல்வி ஆண்டிற்கு L.K.G. முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் கோவையைச் சேர்ந்த நம் நகரத்தார் மாணவ மாணவிகள் 71 பேருக்கும் வெளியூரைச் சேர்ந்த 217 மாணவ மாணவிகளுக்கும் வழக்கம் போல் கல்வி நிதி உதவி வழங்கப்பட்டது.
19-07-2009 ஞாயிற்றுக்கிழமை கோவை நகரத்தார் சங்க வளாகத்தில் 'நேர நிர்வாகம்' என்ற தலைப்பில் ஈரோடு விநாயகா வித்யாபவன் தாளாளர் திரு. B. சந்திரசேகர் அவர்களும், 'தலைமை பண்புகள்' என்ற தலைப்பில் சென்னை திரு. கவிஞர் சூரியன் அவர்களும் பயிற்சி வகுப்புக்கள் நடத்தி சிறப்பித்தார்கள்.
26-07-2009 ஞாயிற்றுக்கிழமை நகரத்தார் சங்க வளாகத்தில் மதுரை Exel Textronics LEO திரு. Er. S. வெங்கடாஜலபதியும் மதுரை மங்கையர்கரசி நிறுவனத்தின் இயக்குனர் திரு. Er. K. முத்துராஜ் அவர்களும் "Soft Skills" என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புகளும் சிறப்புற நடத்தினார்கள். இளைஞர் சங்க உறுப்பினர்களும் நகரத்தார் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
11-10-2009 ஞாயிற்றுக்கிழமை நகரத்தார் சங்க வளாகத்தில் சென்னை திரு. L. பழனியப்பன் அவர்கள் "Stress Management" என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி நடத்தி சிறப்புச் செய்தார்கள்.
29-11-2009 கோவை நகரத்தார் மாணவ, மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும் "தேர்வு பயம் நீங்க..." "அதிக மதிப்பெண் பெற" சிறப்பு பயிற்சி வகுப்புக்கள் நினைவாற்றல் திறன் பயிற்சியாளர் திரு. கிருஷ்ண. வரதராஜன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடத்தினோம்.
7-11-2009 மற்றும் 08-11-2009 ஆகிய இரண்டு நாட்கள் கோவை நகரத்தார் மாணவ மாணவிகளுக்கும், பார்வையாளராக வந்து சிறப்பித்த நகரத்தார் பெருமக்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தினோம். இந்த ஆண்டு முதன்முறையாக கோவை நகரத்தார் பிருந்தாவன் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப் பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு 15-11-2009 அன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக தொழில் அதிபர் திரு. V.K.N. ராஜா அவர்களும், சமூக சேவகர் டாக்டர். S. ராதாகிருஷ்ணன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
22-12-2009 அன்று இரவு வழக்கம் போல் பிள்ளையார் நோன்பு விழா சிறப்பாக நடைபெற்றது. சுமார் 1500 நகரத்தார் பெருமக்கள் இழை எடுத்துக்கொண்டார்கள்.
13-12-2009 அன்று மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் Department Entrepreneurship Studies துறையின் தலைவர் பேராசிரியர் டாக்டர். R. ஜெயராமன், M.Sc, MBA, PhD அவர்கள் தலைமையில் Prime Minister's Employment Generation Programme (PMEGP) திட்டத்தின் ஆரம்ப விழா நடைபெற்று இந்த பயிற்சி வகுப்பில் கோவையைச் சேர்ந்த நகரத்தார்களில் ஆச்சிமார்கள் உட்பட 60 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
20-12-2009 எங்கள் இளைஞர் சங்கத்தோடு கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் இணைந்து "சர்க்கரை நோய் கண்டுபிடிப்பு மற்றும் ஆலோசனை முகாம்" சிறப்பாக நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட நகரத்தார் கலந்து கொண்டு ஆலோசனை பெற்றார்கள்.
25-12-2009 அன்று எங்கள் இளைஞர் சங்கத்தோடு, இராமானந்த அடிகளார் அறக்கட்டளை, அருட்ஜோதி மருத்துவ மையம், குமரகுரு பொறியியல் கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து "சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்" சிறப்பாக நடைபெற்றது. ஏராளமானோர் பயன் பெற்றனர்.
04-01-2010 அன்று பயிற்சி வகுப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் திரு. S. பழனிச்சாமி அவர்களின் தலைமையில் பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது.
07-01-2010 அன்று திரு. N.V. வைத்தியநாதன் அவர்கள் குழுவினரின் "திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி" சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான நகரத்தார் பெருமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
27-02-2010 அன்று 04-01-2010 அன்று ஆரம்பிக்கப்பட்ட பயிற்சி வகுப்புகளின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் தமிழக அரசின் செயலாளர் திரு. K. ஆளுடையபிள்ளை IAS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்புச் செய்தார்கள்.
11-04-2010 ஞாயிற்றுக்கிழமை "Effective Public Speech" இளைஞர்களுக்கான சிறப்பு மேடை பேச்சு பயிற்சி வகுப்பு நிகில் பவுண்டேஷன் முதன்மை பயிற்சியாளர் திரு. S. நாகலிங்கம் அவர்களின் தலைமையில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
14-04-2010 புதன் கிழமை தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஆர். எஸ். புரம் காமாட்சி அம்மன் கோவிலில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அருள்நெறி மன்ற பேராசிரியர் திரு. M. ஜெயபிரகாஷ் அவர்கள் கலந்து கொண்டு திருவிளக்கு வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
2010-2011 ஆம் கல்வி ஆண்டிற்கான L.K.G. முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் கோவையைச் சேர்ந்த நம் நகரத்தார் மாணவ மாணவிகள் 61 பேருக்கும் வெளியூரைச் சேர்ந்த 25 நகரத்தார் மாணவ மாணவிகளுக்கும் வழக்கம் போல் கல்வி நிதி உதவி வழங்கப்பட்டது.
20-11-2010 மற்றும் 27-11-2010 ஆகிய இரண்டு நாட்கள் கோவை நகரத்தார் மாணவ மாணவிகளுக்கும் பார்வையாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்த நகரத்தார் பெருமக்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. சென்ற ஆண்டைப் போல விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 04-12-2010 அன்று பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் மேலாண்மைக் கழகத் தலைவர் திரு. CT.S. சிதம்பரம் செட்டியார் அவர்களும், மிதிலைப்பட்டி திரு. RM. வள்ளியப்பன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
21-11-2010 அன்று தொழில்முனைவோர்கள் மற்றும் இளைஞர்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு "மார்கெட்டிங்க் மேனேஜ்மென்ட்" என்ற தலைப்பில் பெங்களூர் கன்சல்டன்ட் திரு. R. நரசிம்ம அய்யங்கார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
11-12-2010 சனிக்கிழமை அன்று இரவு வழக்கம் போல் பிள்ளையார் நோன்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 1600 நகரத்தார் பெருமக்கள் கலந்து கொண்டு இழை எடுத்து சிறப்பித்தார்கள்.
இதுதவிர இன்னும் ஏராளமான இலக்கிய விழாக்களும் ஆன்மீக விழாவாக ஒவ்வொரு ஆங்கில மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் கோவிலில் அமைந்திருக்கும் ஸ்ரீ பாலதண்டபாணிக்கு அபிஷேக ஆராதனைகளும் அன்று மதியம் பேரூரில் உள்ள நமது விடுதியில் வேல் பூஜையும் அன்னதானமும் நகரத்தார்கள் ஒத்துழைப்போடு சிறப்பாக நடத்தி வருகிறோம்.
மற்றும் ஒவ்வொரு மாதமும் காட்டூர் பிள்ளையார் கோவிலில் அமைந்திருக்கும் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு சஷ்டியில் அபிஷேக ஆராதனைகளும் சிறப்பாக நடத்தி வருகிறோம்.
வரும் காலங்களில் இன்னும் ஏராளமான தனிமனித மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளும் தொழில் சம்பந்தமான ஆலோசனைகளும் இளைஞர்களை ஊக்குவிக்கும் பலவிதமான நிகழ்ச்சிகளும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடும் சிறப்பாக நடத்த நினைத்து உள்ளோம்.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை "கோவையில் நகரத்தார்" என்னும் முகவரி நூலை வெளியிட்டு நகரத்தார்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். அதன்படி இது 5வது வெளீயீடாகும். இந்த ஆண்டு புதிய முயற்சியாக முகவரி C.D -யும் வெளியிட்டு வேண்டுவோர்க்கு கொடுப்பது போல ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த ஐந்தாம் பதிப்பில் கோவையில் உள்ள 1719 நகரத்தார்களின் முகவரிகள் இடம் பெற்றுள்ளன. கோவையில் வாழும் நகரத்தார்கள் இடம் மாற்றம் செய்யும் போது அவ்வப்போது முகவரி மாற்றத்தை தரியப்படுத்தினால் உங்களுடன் எங்களுக்கிருக்கும் தொடர்பு இன்னும் நெருக்கமாக அமையும் என்பதை மகிழ்ச்சியோடு தரியப்படுத்திக் கொள்கிறேன்.
இந்தப் புத்தகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த இளைஞர் சங்க நிகழ்ச்சிகளை உங்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளோம்.
இவ்வெளீயீட்டில் தொகுப்பாசிரியராக இருந்து செயல்பட்ட நிர்வாகச் செயலாளர் திரு. செ. செந்தில் நாராயணன், திரு. மு. மணிகண்டன் மற்றும் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தரிவித்துக் கொள்கிறேன்.
இந்த முகவரி நூல் விலையில்லா வெளீயீடாக வெளிவர பலரும் விளம்பரம் தந்து உதவியுள்ளார்கள். எனவே நன்கொடையாளர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் எப்பொழுதும் எங்கள் வளர்ச்சியில் பங்கு கொள்ளும் அனைத்து நகரத்தார்களுக்கும் கோவை நகரத்தார் சங்க நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றியை இந்த இனிய வேளையில் தரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி
அன்புடன்
தலைவர், கோவை நகரத்தார் இளைஞர் சங்கம்
கோவை